மசாலா தோசை இப்போ பர்கராச்சு, அடுத்து என்ன ? - இந்தியர்களின் கற்பனைகள்

பாரம்பரியமிக்க சில இந்திய உணவு வகைகளை பர்கர் வடிவில் தாங்கள் தயாரித்து பரிமாறும் திட்டத்தை துரித உணவுக்குப் பேர் போன மெக்டொனால்ட் நிறுவனம் அறிவித்தது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை KIRTISH BHATT
Image caption இது தோசையா? பர்கரா?

பர்கர் வடிவில் பரிமாற மெக்டொனால்ட் திட்டமிட்டுள்ளதில் பிரபல தென்னிந்திய உணவான மசால் தோசையும் ஒன்றாகும்.

கடந்த வாரத்தில் மெக்டொனால்ட்டின் புதிய உணவு திட்டங்களான ''தோஸா பர்கர்'' மற்றும் ''அண்டா புர்ஜி பர்கர் (முட்டை துருவல்) ஆகியவை குறித்து தங்களின் கருத்துக்களை பெரும்பாலான இந்தியர்கள் ட்விட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.

சிலர் மெக்டொனால்ட் நிறுவனம் இந்திய உணவுகளுக்கு பொருத்தமான மாற்று உணவுகளை தயாரிக்கும் முயற்சியில் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ள சூழலில், வேறு சிலர் மேலும் பல இந்திய உணவுகளை எவ்வாறு மெக்டொனால்ட் நிறுவனம் தங்கள் பாணியில் பரிமாற மாற்ற முயற்சிக்கலாம் என்று நகைச்சுவையாக கருத்து வெளியிட்டனர்.

இவர்களின் நகைச்சுவையான ஆலோசனைகளை, பிபிசியின் கார்ட்டூனிஸ்டான (கருத்துக் சித்தரக் கலைஞர்) கீர்திஷ் பட் கருத்தில் எடுத்துக் கொண்டு, உலக அளவிலான துரித உணவு சங்கிலிகளில், இந்திய உணவின் பங்கு மற்றும் பரிமாறப்படும் விதம் குறித்து தனது கை வண்ணத்தில் வடிவமைத்துள்ளார்.

'மெக் சமோசா' முயற்சித்து பார்க்கலாமே!

Image caption 'மெக்டொனால்ட் சமோசா' - இது எப்படி?

இந்தியாவில் சாதாரண வீதிகளில் கிடைக்கும் எளிய, அதே சமயத்தில் மிகவும் பிரபலமாக உள்ள உணவு சமோசாவாகும். முழுமையாக இந்திய உணவுகளை தயாரித்து, பரிமாறும் துரித உணவகமாக மெக்டொனால்ட் நிறுவனம் மாறுவதற்கு, இதனை தனது மெனு கார்ட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒருவர் ட்விட்டரில் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

ஏன் 'லஸி' பானத்தை சேர்க்கக் கூடாது?

மெக்டொனால்ட் நிறுவனத்தின் இந்திய உணவு மெனு கார்ட் லஸி பானம் இல்லாமல் நிறைவு பெறாது என்று மற்றொரு ட்விட்டர் பயன்பாட்டாளர் தெரிவித்துள்ளார். தயிரால் தயாரிக்கப்படும் ஒரு அடர்த்தியான இனிப்பு பானம் லஸியாகும்.

அவரவர் பாணி அவரவருக்கே

மெக்டொனால்ட் போன்ற சர்வதேச துரித உணவகங்கள் இந்திய உணவகங்களாக மாற முயற்சிக்கும் வேளையில், சில இந்திய உணவகங்கள் தங்களை சர்வதேச உணவகங்களாக காட்டிக் கொள்ள , பிரபல சர்வதேச துரித உணவு சங்கிலிகளின் பெயர்களை தங்கள் உணவகங்களுக்கு வைத்துள்ளன.

தென் இந்திய மாநிலமான கேரளாவில் பரிமாறப்படும் பிரபல உணவுகளில் ஒன்றான சட்யா உணவு வாழை இலையில் பரிமாறப்படுகிறது.

கேஎஃப்சி துரித உணவகம் இந்திய உணவுகளை தயாரித்து பரிமாறினால் , அது கேஎஃப்சி உணவகமாக தோன்றாமல் முற்றிலும் மாறுபட்டதாக காட்சியளிக்கும்.

'சப்வே' சாம்பார் - இது எப்படி இருக்கு?

Image caption சாம்பார் விற்பனையில் 'சப்வே'

சப்வே உணவகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தால், அந்த உணவகம் பிரபல தென்னிந்திய குடும்பப் பெயரான சுப்பிரமணியன் என்ற பெயரால் ஈர்க்கப்பட்டிருக்கும்.

ரொட்டி (சாண்ட்விச்) மற்றும் சாலடுகளுக்கு பதிலாக, அரிசி ரொட்டியையும், சாம்பார் எனப்படும் பருப்பு குழம்பையும் சப்வே உணவகம் விற்பனை செய்திருக்கும்.

''யுஎஸ்'' என்றால் அமெரிக்காவா? 'உத்தம் சிங்கா?

Image caption ''யுஎஸ்'' என்றால் அமெரிக்காவா? 'உத்தம் சிங்கா?

இந்தியாவெங்கும் உள்ள பிரபல சங்கிலி உணவகமாக யுஎஸ் (அமெரிக்கா) பீட்ஸா உணவகம் கருதப்படுகிறது. பெரும்பாலும், வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவுடன் தான் பீட்ஸா உணவு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, ஏன் ''யுஎஸ்'' என்பது ''உத்தம் சிங்'' என்ற பிரபல வட இந்திய பெயரை குறிப்பிடுவதாக இருக்கக் கூடாது எனபதற்கு எந்த காரணமும் இல்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்