ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசரச் சட்டம்: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவரப்போவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இன்று காலையில் இந்தியத் தலைநகர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

காணொளி: டில்லி வந்த முதல்வரை 'வரவேற்ற' ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
டில்லி வந்த முதல்வரை 'வரவேற்ற' ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் (காணொளி)

இதனால், நேற்றே சென்னை திரும்ப வேண்டிய தான் புதுதில்லியிலேயே தங்கி, அவசரச் சட்டம் கொண்டுவருவது குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் விவாதித்ததாகவும் அதன் அடிப்படையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாநில அரசு திருத்தம் ஒன்றைக் கொண்டுவர முடிவுசெய்துள்ளதாகவும் பன்னீர்செல்வம் கூறினார்.

ஜல்லிக்கட்டு - பண்பாட்டுக் கொண்டாட்டமும், நவீன புரிதலும்

ஜல்லிக்கட்டு தடைக்கும், நாட்டுக் காளைகள் குறைவதற்கும் தொடர்பு இல்லை - பீட்டா

இந்தத் திருத்தத்தை ஒரு அவசரச் சட்டமாக பிறப்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான வரைவுச் சட்டம் மத்திய அரசின் உள்துறைக்கு அனுப்பப்பட்டு மத்திய அரசின் பரிந்துரையுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என்றும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதற்குப் பிறகு குடியரசுத் தலைவர் இதில் உத்தரவு பிறப்பித்து மாநில ஆளுநர் அவசரச் சட்டம் பிறப்பிக்க இயலும் என்றும், ஆகவே அதற்கான வரைவு அவசரச் சட்டம் நேற்றே புதுதில்லியில் இருந்தபடியே தயார் செய்யப்பட்டு, இன்று காலையில் உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பன்னீர்செல்வம் கூறினார்.

தில்லியில் இது தொடர்பாக தொடர் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அதிகாரிகள் தில்லியிலிருந்து செய்வார்கள் என்றும் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் ஒப்புதல் பெற்று இந்த அவசரச் சட்டம் இன்னும் ஓரிரு தினங்களில் பிறப்பிக்கப்படும் என்றும் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

காணொளி: சேலத்தில் ரயிலை தடுத்து நிறுத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சேலத்தில் ரயிலை தடுத்து நிறுத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக பிரதமர் ஏற்கனவே உறுதியளித்திருப்பதால் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஓரிரு தினங்களில் நடைபெறும் என்றும் இதனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், பொதுமக்கள் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டுமென பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

மேலும் தகவல்களுக்கு:

ஜல்லிக்கட்டு - பண்பாட்டுக் கொண்டாட்டமும், நவீன புரிதலும்

இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள்: தமிழகத்தை ஒன்றிணைத்த ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு: பிரதமர் மோதியை சந்தித்தார் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம்

தமிழக உணர்வுக்கு ஆதரவாக ஏ. ஆர். ரஹ்மான் உண்ணாவிரதம்

காணொளி: கோவை கல்லூரி மாணவர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கோவை கல்லூரி மாணவர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்