ஜல்லிக்கட்டு தீர்ப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், அது தொடர்பான இறுதித் தீர்ப்பை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென்ற மத்திய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தீர்ப்பு ஒருவாரம் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டுமென தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அதற்கென அவசரச் சட்டம் இயற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று காலையில் அறிவித்தார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசரச் சட்டம்: முதலமைச்சர் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு தடைக்கும், நாட்டுக் காளைகள் குறைவதற்கும் தொடர்பு இல்லை - பீட்டா

ஜல்லிக்கட்டு எழுச்சிகள் காட்டுவது என்ன ?

ஜல்லிக்கட்டு போராட்டம் - வெளியிலிருந்து திரண்ட ஆதரவும், உள்ளூர் மனநிலையும்

காளைகளைக் காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த அறிவிப்புக்குத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்ப இதுவரை வழங்கவில்லை.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதால் இது தொடர்பான தீர்ப்பை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென மத்திய அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்