ஜல்லிக்கட்டுக்கு அவசர ஆணை - சுற்றுச்சூழல் அமைச்சர் உறுதி

ஜல்லிக்கட்டுக்கு இருக்கும் தடையை நீக்க இன்று அல்லது நாளைக்குள் அவசர ஆணை பிறப்பிக்கப்படும் என்று இந்திய சுற்றுச்சுழல் அமைச்சர் அனில் மாதவ் தவே உறுதியளித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption அவசர ஆணையை வெளியிடுவதற்கான தமிழக அரசின் மனுவை பரிசீலனை - சுற்றுச்சூழல் அமைச்சர்

இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த அனில் மாதவ் தவே இதனை தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு மாடு காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டுவிட்டது என்றும், தமிழ் நாட்டு மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருவதால், ஜல்லிக்கட்டை அனுமதிப்பதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

காணொளி: டில்லி வந்த முதல்வரை 'வரவேற்ற' ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
டில்லி வந்த முதல்வரை 'வரவேற்ற' ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் (காணொளி)

அவசர ஆணையை வெளியிடுவதற்கான தமிழக அரசின் மனுவை பரிசீலனை செய்து, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்கும் என்று அனில் மாதவ் தவே தெரிவித்துள்ளார்.

மேலும், செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவு வழங்கும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உள்துறை அமைச்சரை சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கியிருக்கிறார் என்றும் கூறினார்.

அந்த கடிதம் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கிடைத்தவுடன் இன்று அல்லது நாளைக்குள் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இறுதியாக, இன்றே ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

காணொளி: மெரீனாவில் வீசும் இளைஞர்களின் அலை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மெரீனாவில் வீசும் இளைஞர்களின் அலை

தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதியான போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் இந்த அறிவிப்புகள் வருகின்றன.

மேலும் அறிய:

ஜல்லிக்கட்டுக்கு அவசர ஆணை - சுற்றுச்சூழல் அமைச்சர் உறுதி

ஐந்தாவது நாளாக தொடரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் (புகைப்படத் தொகுப்பு)

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக தமிழகம், புதுச்சேரியில் முழு அடைப்பு; தி.மு.க. ரயில் மறியல்

ஜல்லிக்கட்டு ஆதரவு: தமிழக இயல்பு வாழ்க்கை பாதிப்பு (புகைப்படத் தொகுப்பு)

காணொளி: சேலத்தில் ரயிலை தடுத்து நிறுத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சேலத்தில் ரயிலை தடுத்து நிறுத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்