இத்தாலியில் பனிப்பாறை மூடிய ஹோட்டலில் இருந்து 8 பேர் உயிருடன் மீட்பு

இத்தாலியில் புதன்கிழமை நிகழ்ந்த மிக பெரிய பனி சரிவினால் பெருமளவு நாசமான ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து, எட்டு பேரை அவசர மீட்புதவி பணியாளர்கள் உயிருடன் மீட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

அந்த ஹோட்டலில் முற்றிலும் இடிந்திராத ஒரு பகுதியின் வழியாக, பனி மூடியிருந்த அந்த ஹோட்டலுக்குள் உயிருடன் இருப்போரை அவர்கள் மீட்டுக்கொண்டிருந்தனர்.

காயமுறாமல், நடக்கக்கூடிய நிலையில் இருந்த ஒரு பெண்ணையும், ஒரு சிறுவனையும் வெளியே கொணடு வர, அவர்களைக் கண்ட்தில் மகிழ்ச்சியடைந்த மீட்புதவியாளர்கள் உதவுவதை காணொளி பதிவுகள் காட்டுகின்றன.

பின்னர் அவர்களை தூக்கி செல்லப்படும் படுக்கைகளில் கிடத்தி ஹெலிகப்டர் மூலம் அப்ரோஸோ பிராந்தியத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இன்னும் சிலர் உயிர் தப்பி இருப்பதை மீட்புதவி பணியாளர்கள் அறிய வந்திருக்கலாம் என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஹோட்டல் ரிகோபியானோவில் நிகழ்ந்த இந்த பேரழிவு நடைபெற்று 40 மணிநேரம் கடந்த பின்னர், இன்னும் சுமார் 20 பேரை காணவில்லை. நான்கு பேர் இறந்துவிட்டதாக தெரியவருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்