அதிபராக பதவியேற்கும் டொனால்ட் டிரம்ப் குடும்பத்தினர் வெள்ளை மாளிகை வருகை

டொனால்ட் டிர்ம்பும் அவருடைய மனைவியும் அதிபர் பாராக் ஒபாமா மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமாவோடு காலை உணவுக்காக வெள்ளை மாளிகையை வந்தடைந்துள்ளனர்.

பின்னர் அவர்கள், அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் பதவியேற்று ஏற்புரையை வழங்க இருக்கின்ற கேபிட்டல் கட்டடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுவார்கள்.

டிரம்பின் குடும்பத்தினர், இந்த பதவியேற்பு நாளை அருகிலுள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற பாரம்பரிய செப வழிபாட்டோடு தொடங்கியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Joe Raedle/Getty Image

பலத்த பாதுகாப்புடன் நடைபெற இருக்கும் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரப்பத காலநிலைக்கு தக்கவாறு ஆடை அணிந்தவராக ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும், எதிர்க்கட்சியினரும் வாஷிங்டன் நோக்கி பயணித்து வருகின்றனர்.

முன்னதாக, தன்னுடைய அலுவலகமான ஓவல் மாளிகையை விட்டு கடைசியாக வெளியேறுவதற்கு முன்னால், பராக் ஒபாமா வழக்கப்படி, தனக்கு பின் வரும் அதிபருக்கு தனிப்பட்ட குறிப்பை எழுதிவைத்துள்ளார்.

காணொளி: மருமகனுக்கு ஆலோசகர் பதவி: சர்ச்சையில் டிரம்ப்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மருமகனுக்கு ஆலோசகர் பதவி: சர்ச்சையில் டிரம்ப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்