அவசர சட்டத்தை முறையான சட்டமாக்க வரும் கூட்டத்தொடரில் மசோதா - முதல்வர் பன்னீர்செல்வம்

தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு அவசர சட்டமானது இன்னும் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை tndipr
Image caption அவசர சட்டத்தை முறையான சட்டமாக்க வரும் கூட்டத்தொடரில் மசோதா - முதல்வர் பன்னீர்செல்வம்

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாநில அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டமானது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்றும், வருகிற 23 ஆம் தேதி கூட உள்ள சட்டமன்றத் கூட்டத்தொடரில் சட்டமுன் வரைவானது முன்மொழியப்பட்டு சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இறுதியாக, அறவழியில் போராடிய மாணவர்களுக்கு நன்றி கூறிய ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோதிக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்