ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்ல மது, ஊழலுக்கு எதிராகவும் போராட வேண்டும் : அன்புமணி ராமதாஸ்

மது, ஊழல், நிர்வாக சீர்கேடு எதிராகவும் இளைஞர்கள் போராட வேண்டும் என்று பா.ம.க இளைஞரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்ல மது, ஊழலுக்கு எதிராகவும் போராட வேண்டும் : அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடை அவசர சட்டம் மூலம் விலக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசலை முதல்வர் பன்னீர்செல்வமே திறந்து வைப்பார் என்றும் தமிழக அரசு நேற்றைய தினம் கூறியிருந்தது.

ஆனால், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றும், அவசர சட்டம் போதாது என்றும் கூறி மாநிலம் முழுக்க போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போதுள்ள சூழலில் இன்று அலங்காநல்லூரில் வாடிவாசல் திறக்கப்படுமா என்பதே கேள்விக் குறியாகியுள்ளது.

இச்சூழலில் மாணவர்களின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து அன்புமணி ராமதாஸ், ''எப்போதும் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும், கோஷங்களை எழுப்புவோம் அதோடு சரி இந்த போராட்டத்தால் எந்த ஒரு தீர்வும் கிடைக்காது. ஆனால், தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தால் தீர்வு கிடைத்துள்ளது'' என்றார்.

மேலும், 50 ஆண்டுகளுக்குமுன் இந்தி எதிர்ப்பின் போது இதே போன்ற எழுச்சியைக் கண்டதாக கூறியுள்ள அன்புமணி, மது, ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு போன்ற பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்