ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு : ஆறாவது நாளை எட்டிய போராட்டம்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் போராட்டம் ஆறாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னை மெரீனா கடற்கரை, மதுரை தமுக்கம் மைதானம், அலங்காநல்லூர், கோயம்புத்தூர் வ.உ.சி பூங்கா, திருநெல்வேலி, பெரம்பலூர், தஞ்சாவூர் என மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் ஆறாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகின்றன.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் கடந்த சில தினங்களுக்குமுன் தொடங்கிய போராட்டமானது தற்போது தமிழகம் முழுக்க பரவி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.

இச்சூழலில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருந்தார்.

ஆனால், ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் வேண்டாம் நிரந்தர தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுக்க போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரை அலங்காநல்லூரில் பொதுமக்களின் போராட்டம் காரணமாக வாடிவாசல் திறக்கப்படவில்லை.

மணப்பாறை மற்றும் புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்