ஜல்லிக்கட்டு போராட்டத்தை தள்ளி வைக்க கார்த்திகேய சேனாபதி கோரிக்கை

ஜல்லிக்கட்டு நடப்பதற்கு ஏதுவாக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதை தற்காலிக தீர்வாக கருதி, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தை போராட்டக்காரர்கள் தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கார்த்திகேய சேனாபதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் தொடரும் போராட்டம் குறித்து மேலும் படிக்க: ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு : ஆறாவது நாளை எட்டிய போராட்டம்

படத்தின் காப்புரிமை Karthikeya Sivasenapathy FACEBOOK
Image caption ஜல்லிக்கட்டு போராட்டத்தை தள்ளி வைக்க கார்த்திகேய சேனாபதி கோரிக்கை

முன்னதாக, நேற்று (சனிக்கிழமை) தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்து விட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.

இடைவிடாத ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து படிக்க: "ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்" - வாடிவாசல் திறக்கவில்லை

படத்தின் காப்புரிமை Getty Images

ஜல்லிக்கட்டு நடப்பதற்கு ஏதுவாக தமிழக அரசு அவசரத் சட்டம் கொண்டு வந்துள்ள சூழலில், போராட்டக்காரர்கள் இன்னும் தங்களின் போராட்டத்தை கை விடாது தொடர்ந்து வருகின்றனர். இது குறித்து கருத்து பிபிசி தமிழோசையிடம் பேசிய காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கார்த்திகேய சேனாபதி, '' இந்த விஷயத்தில் நிரந்தர தீர்வு வரும் வருவதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும். அது வரை தற்போது கிடைத்திருக்கும் தற்காலிக தீர்வை மதித்து போராட்டக்காரர்கள் தங்களின் போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைSENAAPATHY KANGAYAM CATTLE RESE

மேலும் அவர் கூறியதாவது, ''தற்போது வந்துள்ள அவசர சட்டம் தலைவலிக்கு தற்காலிக நிவாரணி தருவது போன்ற ஒரு தீர்வு தான்; அதை சட்டமன்றம் சட்டமாக்குவதுதான் நிரந்தர தீர்வு . ஆனால் அதற்கு காலமெடுக்கும் என்ற நிலையில், ஓரளவு கால அவகாசம் தந்து, உதாரணத்துக்கு மார்ச் 31 வரை அவகாசம் தந்து, பின்னர் தேவைப்பட்டால் போராட்டத்தை மீண்டும் தொடங்கலாம் '' என்று தெரிவித்தார்.

''தற்போது நாடாளுமன்ற அவைக் காலம் இல்லாததால் மத்திய அரசு இது தொடர்பாக உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வர இயலாது. இதற்கான கால அவகாசம் வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் '' என்று கார்த்திகேய சேனாபதி கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

போராட்டக்காரர்கள் இன்னும் போராட்டத்தை கை விடாதது குறித்து கார்த்திகேய சேனாபதி கூறுகையில், ''கடந்த சில வருடங்களாகவே ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு அவ நம்பிக்கை அதிகரித்து விட்டது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட மாட்டாது என்று மக்கள் அவநம்பிக்கை கொள்கின்றனர். ஆனால்,மற்ற விஷயங்களை பேசி, ஜல்லிக்கட்டு போராட்டத்தை நீர்த்துப் போகும்படியான செயலில் யாரும் இறங்க கூடாது'' என்று அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் நடத்திய முகநூல் காணொளி

''இன்று மாலை 6 மணிக்கு, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் உள்பட சில ஆர்வலர்களுடன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தலைநகர் தில்லியில் நடந்தது என்ன என்பதனையும், தமிழகத்தில் இனி எவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் விளக்கவுள்ளளோம்'' என்று கார்த்திகேய சேனாபதி தெரிவித்தார்.

''மேலும் போராட்டடக்காரர்கள் என் முக நூல் பக்கத்தில் நான் குறிப்பிட்டபடி போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும். கை விட வேண்டும் என்று நான் கூறவில்லை. மத்திய அமைச்சர்களை சந்தித்துள்ளளோம். அவர்களின் வாக்குறுதிகளை ஏற்று, இப்போராட்டதை மார்ச் 31 வரை தள்ளி வைக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

ஜல்லிக்கட்டு விவகாரம் : மாநில அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்