சென்னை மெரினாவில் தொடரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை போலிசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய நிலையில், கடற்கரையோரம் சுமார் 5 அயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர்.

இன்று அதிகாலை முதலே சென்னை மெரினா கடற்கரை மற்றும் தமிழகத்தின் பிற நகரங்களில் பெருந்திரளாகக் கூடியிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டங்களைப் போலிசார் இன்று கலைக்கத் தொடங்கினார்கள்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
'அவை காளைகள் அல்ல; எங்களது உடன்பிறப்புக்கள்'

இந்த நிலையில், மெரினாவில் போலிசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆதரவாளர்கள் கடற்கரையிலிருந்து ஓடிப் போய் கடலை ஒட்டி நிற்பதையும், போலிசார் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முயல்வதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இன்று காலை 4 மணி அளவில் மெரினாவில் உள்ள ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அமைதியாக கலைந்து செல்லும்படி போலிசார் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, 6 மணியளவில் போலிசார் தரப்பில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டு சட்ட முன் வடிவு போராட்டக்காரர்களிடம் வழங்கப்பட்டது.

போலிசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினர் போராட்டத்தை கைவிட்டனர்.

மற்றொரு குழுவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்