அலங்காநல்லூரில் பிப்ரவரி 1 ஆம் தேதி ஜல்லிக்கட்டு அறிவிப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஊர் கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடைவிதித்து கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு விதித்திருந்தது.

இச்சூழலில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்றும், பீட்டா அமைப்பு மீது தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மாவட்டந்தோறும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அவசரச்சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்தது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

தற்போது, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகளை கோலாகலமாக நடத்த அக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும், அலங்காநல்லூரில் 1 ஆம் தேதி காலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் என்றும் மதுரை அலங்காநல்லூர் விழா குழுவின் தலைவரான சுந்தர்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணியிலிருந்து 8 மணி வரை இறைவழிப்பாடு முடிந்தவுடன் 9 மணிக்கு வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

'ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம்'

யோசித்து செயல்படுங்கள் கண்மணிகளே! - நடிகர் விவேக் கோரிக்கை

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் இருவர் மரணம்?

ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து விலகுகிறேன் : ஹிப் ஹாப் ஆதி வருத்தம்

சட்டமன்றத்தில் நாளை ஜல்லிக்கட்டு சட்ட முன்வரைவு நிறைவேறும்: முதல்வர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்