ஜல்லிக்கட்டு: சென்னை கடற்கரையில் நுழைய முயன்றவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக, சென்னை கடற்கரையில் நுழைய முயன்ற ஒரு கும்பல் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பட்டாக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சில போராட்டக்காரர்கள் கடற்கரையை விட்டு அகல மறுத்து, கடலில் இறங்கி போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர். அவர்களை அப்பறப்படுத்த போலீசார் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

முன்னதாக, இன்று (திங்கள் கிழமை)காலி முதலே, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைக்க போலிசார் முயன்று வருகையில், சென்னைக் கடற்கரையை ஒட்டியுள்ள பல பகுதிகளில் வன்செயல்கள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Image caption சென்னையில் வன்முறை

சென்னை கடற்கரையை அண்மித்த ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் வன்செயல்கள் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்