அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த போராட்டக்காரர்கள் எதிர்ப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அக்கிராம குழுவினர் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மதுரை அலங்காநல்லூரில் கடந்த எட்டு நாட்களாக அதன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இச்சூழலில், இன்று காலை அலங்காநல்லூர் கிராம மக்கள் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகளை கோலாகலமாக நடத்த முடிவு செய்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டக்காரர்களை போலிசார் விரட்டியடித்துள்ளனர்.

அலங்காநல்லூரை தொடர்ந்து பாலமேட்டில் பிப்ரவரி 2-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்