ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா காந்தி மனு செய்யவில்லை என்கிறார் நிர்மலா சீத்தாராமன்

ஜல்லிக்கட்டுக்கு தடைகோரி மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனு எதையும் தாக்கல் செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மேனகா காந்தி தடை கோரி மனு செய்யவில்லை : நிர்மலா சீத்தாராமன்

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீத்தாராமன்.

சமூக வலைத்தளமான ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ஜல்லிக்கட்டுக்கு தடைக்கோரி மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தில் மனு என்று சில தொலைக்காட்சிகளில் வரும் செய்தி முற்றிலும் தவறு என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER

மேலும், மேனகா காந்தியுடன் இது குறித்து பேசியதாக கூறியுள்ள நிர்மலா சீத்தாராமன், தான் தடை கோரி மனு ஏதும் பதிவு செய்யவில்லை என்று தெரிவித்ததாக தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

'ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம்'

யோசித்து செயல்படுங்கள் கண்மணிகளே! - நடிகர் விவேக் கோரிக்கை

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் இருவர் மரணம்?

ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து விலகுகிறேன் : ஹிப் ஹாப் ஆதி வருத்தம்

சட்டமன்றத்தில் நாளை ஜல்லிக்கட்டு சட்ட முன்வரைவு நிறைவேறும்: முதல்வர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்