இந்திய குடியரசு தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளும் அபுதாபி இளவரசர்

இந்தியத் தலைநகர் தில்லியில் இன்று (வியாழக்கிழமை)நடக்கும் நாட்டின் வருடாந்திர குடியரசு தின அணிவகுப்பில், தலைமை விருந்தினராக கலந்து கொள்ள அபுதாபியின் இளவரசர் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

வளைகுடா நாடுகளுடன் பொதுவாக நெருக்கமான உறவுகளை பராமரிக்கும் தனது பிராந்திய போட்டியாளரான பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையாக இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption அபுதாபி இளவரசரை வரவேற்கும் மோதி

இந்தியாவின் பழைய கட்டமைப்பை மேம்படுத்தும் பணிக்காக தான் ஏறக்குறைய 75 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப் போவதாக ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது.

நேற்று (புதன்கிழமை) இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இளவரசர் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் இடையே நடந்த ஒரு கூட்டத்துக்கு பிறகு இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே ஏற்பட்ட பல ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்