கிரீஸிற்கு தஞ்சம் கோரி சென்ற படையினரை துருக்கியிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் எதிர்ப்பு

துருக்கியில் கடந்தாண்டு தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை அடுத்து ராணுவத்தை சேர்ந்த 8 படையினர் குழு ஒன்று ஹெலிகாப்டரில் நாட்டைவிட்டு தப்பியோடி கிரீஸில் தஞ்சம் அடைந்த வழக்கில், அவர்களை துருக்கியிடம் ஒப்படைப்பதற்கு எதிராக கிரீஸ் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை அடுத்து கைது செய்யப்பட்ட ராணுவ படையினர்.

அந்த குழுவில் உள்ள சில நபர்களை துருக்கியிடம் ஒப்படைக்க கீழ் நீதிமன்றம் ஒன்று கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்த நிலையில் உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்துள்ளது.

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் இவர்களுக்கு தொடர்பில்லை என்று படையினரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீஸில் தஞ்சம் கோரி படையினர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால், அந்தப் படையினருக்கு ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி சதியில் தொடர்பு இருப்பதாக துருக்கி குற்றஞ்சாட்டி உள்ளது.

மேலும், அமெரிக்காவை மையமாகக் கொண்ட இஸ்லாமிய மதகுருவான ஃபெத்துல்லா குலன் மூளையாகச் செயல்பட்டார் என்றும் துருக்கி கூறி வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்