ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் முதல் அவசரச்சட்டம் வரை : பிபிசி தமிழின் சிறப்பு பக்கம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு பதிவு செய்த சீராய்வு மனுவை ஒன்றை தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்பது குழப்பமாக இருந்தது.

ஜல்லிக்கட்டுக்கு தொடரும் தடை; தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தமிழகத்தில் ஆங்காங்கே அத்தடையை நீக்க பல போரட்டங்கள் நடைபெற தில்லி ஜந்தர் மந்தரில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக் கோரி ஜல்லிக்கட்டு மீட்பிற்கான இயக்கம் என்ற 7 பேர் கொண்ட குழுவினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி டெல்லியில் தொடர் உண்ணாவிரதம்

கடந்த ஜனவரி 8 ஆம் தேதி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்றும், இதனை நடத்த ஏதுவாக மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமென்றும் வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் பேரணியொன்றை நடத்தினர்.

'ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம்': இளைஞர்கள் கூட்டத்தால் அதிர்ந்த சென்னை

ஜல்லிக்கட்டிற்காக சென்னையில் திரண்ட இளைஞர்கள் கூட்டம் (புகைப்படத் தொகுப்பு)

இந்தியாவில் பீட்டா(PETA -People for the Ethical Treatment of Animals) செயல்பட தொடங்கிய பிறகு தான், நாட்டு மாடு மற்றும் காளை இனங்களின் அழிவு தொடங்கியது என்று சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் கார்த்திகேய சேனாபதி பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்திருந்தார்.

நாட்டு ரக காளைகளின் அழிவுக்கு பீட்டா காரணம்: கார்த்திகேய சேனாபதி குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடத்திய மாணவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டம் நடத்திய மாணவர்களின் கருத்துக்கள்

இதேவேளை மதுரையில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கக்கோரி பொதுமக்கள் மற்றும் சில அமைப்பை சேர்ந்தவர்கள் தடையை மீறி பேரணி ஒன்றை நடத்தினர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அவனியாபுரத்தில் தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்ட பேரணி (காணொளி)

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் காலை முதல் போராட்டங்கள் தொடங்கி நடைபெற்றன.

அலங்காநல்லூர் நோக்கி விரையும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அலங்காநல்லூர் நோக்கி விரையும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குக்காக காலை முதல் போராடி வந்தவர்களை கைதுசெய்து காவல்துறை அப்புறப்படுத்தியது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கைது

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை விடுவிக்க வேண்டுமெனக் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடரும் போராட்டங்கள்

மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்கள் நடத்தும் போராட்டங்களை தொடர்ந்து ஆதரிப்பதில் உள்ளூர் மக்களுக்கு பல சங்கடங்கள் இருக்கின்றன. இருந்தபோதும் தற்போதைய கைது நடவடிக்கையை அவர்கள் எதிர்த்துள்ளதாக பிபிசி தமிழின் சென்னை செய்தியாளர் முரளிதரனின் சிறப்பு கட்டுரை.

ஜல்லிக்கட்டு போராட்டம் - வெளியிலிருந்து திரண்ட ஆதரவும், உள்ளூர் மனநிலையும்

பீட்டா அமைப்பு சார்பாக அரசுடன் தொடர்பு கொள்ளும் அதிகாரி நிகுன்ச் ஷர்மா பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.

ஜல்லிக்கட்டு தடைக்கும், நாட்டுக் காளைகள் குறைவதற்கும் தொடர்பு இல்லை - பீட்டா

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் (காணொளி)

சென்னை ராஜிவ் காந்தி சாலையில் தகவல் தொழில் நுட்ப துறை (ஐ.டி.) ஊழியர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு தடை எதிர்ப்பு - ஐடி ஊழியர்களும் குதித்தனர்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், தான் தமிழக உணர்வுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

தமிழக உணர்வுக்கு ஆதரவாக ஏ. ஆர். ரஹ்மான் உண்ணாவிரதம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தின் பட்டித்தொட்டிகளில் எல்லாம் போராட்டம் நடைபெறுவதால், தமிழகம் ஸ்தம்பித்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு ஆதரவு: தமிழக இயல்பு வாழ்க்கை பாதிப்பு (புகைப்படத் தொகுப்பு)

தமிழகமெங்கும் மூன்றாவது நாளாக ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடைபெற்றன. ஏரளாமான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட இந்த தொடர் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் குறித்த புகைப்பட தொகுப்பு இது.

இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள்: தமிழகத்தை ஒன்றிணைத்த ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியிலும் கடைகள் அடைக்கப்பட்டன. தி.மு.க சார்பில் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக தமிழகம், புதுச்சேரியில் முழு அடைப்பு; தி.மு.க. ரயில் மறியல்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும்: போராட்டக்காரர்கள் கருத்து (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும்: போராட்டக்காரர்கள் கருத்து (காணொளி)

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னையில் மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற, சென்னை போராட்டத்தில் அதிகளவில் இளைஞர்கள் உள்ளதால், நகரத்தில் உள்ள கல்லூரிகளில் கால வரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அதுகுறித்த காணொளி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மெரீனாவில் வீசும் இளைஞர்களின் அலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தொடங்கிய ஜல்லிக்கட்டு ஆதரவு போரட்டம் உலக அளவில் கவன ஈர்ப்பு பெற்று, தமிழகம் முழுவதும் ஐந்தாவது நாளாக தொடர அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

ஐந்தாவது நாளாக தொடரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் (புகைப்படத் தொகுப்பு)

தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையிலும் தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

இலங்கை: மட்டக்களப்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஏரளமான இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இரவு முழுவதும் தொடர்ந்த ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டில் சூதாட்டம் நடப்பதாக விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜல்லிக்கட்டில் சூதாட்டம் நடக்கிறது: விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன்

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோதியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து மனு அளித்தார்.

ஜல்லிக்கட்டு: பிரதமர் மோதியை சந்தித்தார் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம்

டில்லி வந்த முதல்வரை 'வரவேற்ற' ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
டில்லி வந்த முதல்வரை 'வரவேற்ற' ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் (காணொளி)

சேலத்தில் ரயிலை தடுத்து நிறுத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சேலத்தில் ரயிலை தடுத்து நிறுத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

தமிழகத்தில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி முதல் பெரும்பாலான வணிகர்கள் அமெரிக்க குளிர்பானமான பெப்சி, கொக்கோ கோலா போன்றவற்றை விற்கமாட்டார்கள் என தமிழ் நாடு வணிகர் சங்கங்களில் பேரவை அறிவிப்பு வெளியிட்டது.

தமிழகத்தில் பெப்சி-கோக் விற்பனை நிறுத்தப்படும்: வணிகர் சங்க பேரவை

தமிழர்களின் உயரிய கலாச்சாரம் மிகவும் பெருமைக்குரியது என்றும், மத்திய அரசு தமிழர்களின் கலாச்சார விருப்பங்களை காப்பதில் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி கருத்து தெரிவித்திருந்தார்.

தமிழர்களின் கலாச்சாரம் பெருமைக்குரியது: பிரதமர் மோதி

ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல மது, ஊழல், நிர்வாக சீர்கேடு எதிராகவும் இளைஞர்கள் போராட வேண்டும் என்று பா.ம.க இளைஞரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்ல மது, ஊழலுக்கு எதிராகவும் போராட வேண்டும் : அன்புமணி ராமதாஸ்

ஜல்லிக்கட்டுக்கு இருக்கும் தடையை நீக்க அவசர ஆணை பிறப்பிக்கப்படும் என்று இந்திய சுற்றுச்சுழல் அமைச்சர் அனில் மாதவ் தவே உறுதியளித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு அவசர ஆணை - சுற்றுச்சூழல் அமைச்சர் உறுதி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கக்கோரயும்,பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்கக்கோரியும் லண்டனில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்றனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லண்டனில் திரண்ட தமிழர்கள்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டமானது ஐந்தாவது நாளை எட்டிய நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் போராட்டகாரர்கள் நூதனமாக தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டமும், பொதுமக்களின் நூதன எதிர்ப்பும் (புகைப்படத் தொகுப்பு)

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்துவிட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.

ஜல்லிக்கட்டு விவகாரம் : மாநில அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு அவசர சட்டமானது இன்னும் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.

அவசர சட்டத்தை முறையான சட்டமாக்க வரும் கூட்டத்தொடரில் மசோதா - முதல்வர் பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என மாநிலம் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்: தமிழகத்தில் தொடரும் போராட்டம்

ஜல்லிக்கட்டு தொடர்பாக நிரந்தர தீர்வு வேண்டும் என்றும், தற்காலிக தீர்வில் தாங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அலங்காநல்லூரில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். எனவே, அலங்காநல்லூர் வாடிவாசலில் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது என்று போராட்டக்கரர்கள் தெரிவித்தனர்.

"ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்" - வாடிவாசல் திறக்கவில்லை

ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், தங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

வாடிய வாடிவாசல் (புகைப்படத் தொகுப்பு)

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மாடு முட்டியதில் இருவர் இறந்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்தது.

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் இருவர் மரணம்?

மணப்பாறையில் சீறிப்பாய்ந்த காளைகள் (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மணப்பாறையில் சீறிப்பாய்ந்த காளைகள் (காணொளி)

தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கையில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இலங்கை: மலையகத்தில் டரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்

ஜல்லிக்கட்டு நடப்பதற்கு ஏதுவாக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதை தற்காலிக தீர்வாக கருதி, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தை போராட்டக்காரர்கள் தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கார்த்திகேய சேனாபதி கூறினார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தள்ளி வைக்க கார்த்திகேய சேனாபதி கோரிக்கை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டங்களில் சிலர் சமூகத்திற்கு விரோதமாக எதிராக நடந்து கொண்டார்கள் என்றும், இதனால் தான் மனதளவில் புண்பட்டு இருப்பதாகவும் ஹிப்ஹாப் தமிழன் என்று அறியப்படும் ஆதி ஒரு காணொளியில் கூறியுள்ளார். மேலும், இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து தான் விலகுவதாகவும் அறிவித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து விலகுகிறேன் : ஹிப் ஹாப் ஆதி வருத்தம்

ஜல்லிக்கட்டுக்கான புதிய சட்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவோடு தமிழக சட்டசபையில் நிறைவேறியது.

ஜல்லிக்கட்டுக்கு புதிய சட்டம் நிறைவேறியது

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை போலீசார் அப்பறப்படுத்தி வரும் சூழலில், தற்போது நடைபெறும் சம்பவங்கள் தனக்கு வேதனையளிப்பதாகவும், போராட்டக்காரர்கள் உடனடியாக அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறும் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்: ரஜினிகாந்த் வேண்டுகோள்

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைக்க போலிசார் திங்கட்கிழமை காலையிலிருந்து முயன்று வருகையில், சென்னைக் கடற்கரையை ஒட்டியுள்ள பல பகுதிகளில் வன்செயல்கள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இப்போராட்ட நிகழ்வுகளால், பாதிப்படைந்த சென்னை மாநகர போக்குவரத்து குறித்த புகைப்படத் தொகுப்பு இது.

போராட்டத்தால் பாதிப்படைந்த சென்னை மாநகர போக்குவரத்து (புகைப்பட தொகுப்பு)

சென்னையில் இன்று நடைபெற்ற சில வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல என்று நடிகர் லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல : நடிகர் லாரன்ஸ்

தமிழகத்தின் மேற்கு மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் திடிரென அங்கு நிறுத்தியிருந்த சரக்கு வாகனத்திலிருந்த குளிர்பானங்களை தரையில் வீசி உடைத்தனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கோவை காந்திநகர் பேருந்து நிலையத்தில் வன்செயல் சம்பவம்

போராட்டக்காரர்களை முதல்வர் சந்தித்திருக்கலாம் - நடிகர் கமல்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
போராட்டக்காரர்களை முதல்வர் சந்தித்திருக்கலாம் - நடிகர் கமல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சென்னை போராட்டத்தில் வன்முறை: முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பேட்டி

ஜல்லிக்கட்டு போராட்டம் - திருச்சியில் அமைதியாக முடிக்கச் செய்த போலீஸ் அதிகாரி (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அமைதியாக முடித்த போலீஸ் அதிகாரியின் உரை (காணொளி)

ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்தாலும், எஞ்சியிருந்த சிலர் இன்று சென்னை மெரினா கடற்கரையில் சில மணிநேரங்கள் இருந்து , பின்னர் போலிசாரின் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் திரும்பச் சென்றனர்.

போராட்டம் முடிந்த இன்றைய மெரினா (புகைப்படத் தொகுப்பு)

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நிரந்தர சட்டம் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகக் கூறப்படுவது தொடர்பாகவும், ஊடகங்களில் வெளியானதாக சொல்லப்படும் காவல் துறையினரே குடிசைகளுக்கு தீ வைத்தது, வாகனங்களை கொளுத்தியது போன்ற நிகழ்வுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை வன்முறை; தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி வெளியிட்ட அரசு அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு: 2016ம் ஆண்டு உத்தரவை திரும்பப் பெறுகிறது மத்திய அரசு

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும் விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புக்கள் மனுத்தாக்கல் செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.

ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்த்து விலங்குகள் நல அமைப்புகள் வழக்கு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமெனக் கோரி மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் ஜனவரி 23 முடிவடைந்தபோது, சென்னையிலும், மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் காவல்துறை நடந்துகொண்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம் : அத்துமீறல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழக காவல் துறை

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உணர்வினை பிரதிபலிக்கும் வகையில் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்கள் மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 21 லட்சம் கடைகளில் விற்பனை செய்யப்படாது என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பெப்சி, கோக் குளிர் பானங்களுக்கு தடை ஏன்? விக்கிரமராஜா விளக்கம்

ஜல்லிக்கட்டு போராட்டம் : தீக்கிரையாக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம் (புகைப்படத் தொகுப்பு)

''போலீஸ்தான் தீ வைத்தது'' : நடுக்குப்பம் மக்கள் கருத்து (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
''போலீஸ்தான் தீ வைத்தது'' : அத்துமீறலை விளக்கும் நடுக்குப்பம் மக்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில், தேசவிரோத சக்திகள் ஊடுருவி, பிரிவினைவாத எண்ணங்களைப் பரப்பி, வன்முறையைத் தூண்டிய காரணத்தால்தான் போலீசார் நடவடிக்கை எடுத்ததாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் விளக்கமளித்துள்ளார். ஆனால், முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து, திமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேசவிரோத சக்திகள் ஊடுருவல்: முதல்வர் குற்றச்சாட்டு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்