வழிநெடுக பேனர் வைப்பதைத் தவிர்க்க திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை

திமுக கூட்டங்களுக்கு, ஆடம்பரப் பேனர்களைக் குறைத்து கட்சிக் கொடிகளைப் பயன்படுத்துமாறு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption `ஆடம்பரம் ஆபத்து'

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

அதில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்திற்காக கோவை சென்றிருந்த போது, வழிநெடுக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அத்தகைய ஆடம்பர வெளிப்பாடுகள் அதிகமாகி முகம் சுளிக்கும் அளவுக்கு அமைந்து விடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சாலையின் இருபுறத்திலும், சில நேரங்களில் சாலையின் நடுவிலும் பேனர்கள் அமைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள ஸ்டாலின், வழிநெடுக பேனர்கள் அமைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

பேனர்களைத் தவிர்த்துவிட்டு கட்சிக் கொடியை அதிகம் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளார்.

ஆடம்பர விளம்பரங்களைக் கைவிட்டு, லட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் போது பொதுமக்களின் பேராதரவு பெருகும் என்றும், புதிய இளைஞர்கள் நம்முடன் அணிவகுத்து வருவார்கள் என்றும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்