அலங்காநல்லூர் , பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் தேதிகள் அறிவிப்பு

அலங்காநல்லூரில் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதியும், பாலமேட்டில் பிப்ரவரி 9-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு கிராமங்களின் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இன்று (திங்கள்கிழமை) தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த இந்த ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர், ஜல்லிக்கட்டு ஆதரவான சட்டம் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் கூறும் போது, "அலங்காநல்லூரில் பிப்ரவரி 10-ஆம் தேதியும், பாலமேட்டில் பிப்ரவரி 9-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறும் " என்று தெரிவித்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், ''ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த முதல்வருக்கும், போராடிய மாணவர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ஆம் தேதியும், பாலமேட்டில் பிப்ரவரி 2-ஆம் தேதியும் நடத்தப்படுவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இதே போல், அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் என்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்