ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஜல்லிக்கட்டு வன்முறை: கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை: ஓ. பன்னீர்செல்வம்

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மேலும், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டம் ஏன் இயற்றப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு எதிராக பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு இடைக்கால மனு தாக்கல் செய்தது.

ஜல்லிக்கட்டு போராட்டம் : அத்துமீறல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழக காவல் துறை

இன்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னதாக, ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது.

இந்த சட்ட வரைவு தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, இந்திய குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று விட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்