இந்தியாவில் மர்மமான முறையில் குழந்தைகள் இறந்ததற்கு லீச்சீ பழம் காரணமா?

வட இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மர்மமான முறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததற்கான காரணத்தை அமெரிக்கா மற்றும் இந்திய விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று கண்டு பிடித்திருக்கலாம்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, பிகாரில் உள்ள ஒரு பகுதியில் ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றிய குழந்தைகள், திடீர் வலிப்பு நோய் மற்றும் நினைவிழத்தல் போன்ற பிரச்சனையில் பாதிக்கப்பட்டனர்.

அதில் சுமார் பாதி எண்ணிக்கையிலான குழந்தைகள் உயிரிழந்ததால் மருத்துவர்களை அது குழப்பத்தில் ஆழ்த்தியது.

மருத்துவ பத்திரிக்கையான "தி லான்செட்டில்" வெளியான புதிய ஆய்வின்படி, பழுக்காத லீச்சீ பழங்களை வெறும் வயிற்றில் உண்டு அது விஷமாக மாறியதே உயிரிழப்பிறகான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில குழந்தைகள் குறிப்பாக பாதிக்கப்பட்டதற்கு, மரபு ரீதியான காரணிகள் மூலம் அதை விளக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்