சசிகலா நியமனத்திற்கு விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அ.தி.மு.கவின் பொது செயலாளராக சசிகலா நடராஜன் நியமனம் செய்யப்பட்டது குறித்து, அக்கட்சியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சோதனைகளின் தொடக்கம்

கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொது செயலாளருமான ஜெயலலிதா டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்ட நிலையில், அக்கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

அதற்கு முன்னர் கட்சியின் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்ய சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் அ.தி.மு.க தொண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.

அ.தி.மு.கவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே.சசிகலாவின் நியமனம் செல்லாது என்று கூறி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் எம்.பி சசிகலா புஷ்பா.

தற்போது, தலைமை தேர்தல் ஆணையமானது அ.தி.மு.கவிடம் சசிகலா நியமனம் குறித்து கேள்வி எழுப்பி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்