தாயின் சடலத்தை உறை பனியில் 32 கி.மீ தூரம் சுமந்து சென்ற ராணுவ வீரர்

இந்திய ராணுவத்தை சேர்ந்த முகமது அப்பாஸ் என்ற படைவீரர் அவருடைய சகோதரருடன் தங்களுடைய தாயின் சடலத்தை, 10 அடி ஆழ உறைப்பணியில் 32 கி.மீ தூரம் நடந்து சுமந்து சென்றது குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.

படத்தின் காப்புரிமை MOHD RAFIQ ABBASI

அப்பாஸின் தாயின் பெயர் சகீனா பேகம். அவருக்கு வயது 55. அப்பாஸுடன் தங்கியிருந்த அவர் கடந்த மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

அந்த சமயம் பதான்கோட்டில் உள்ள ராணுவ தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் அப்பாஸ்.

தன் தாயின் சடலத்தை சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்வதற்காக காஷ்மீருக்கு கொண்டு சென்றார் அப்பாஸ்.

படத்தின் காப்புரிமை MOHD RAFIQ ABBASI
Image caption உறைபனியில் ராணுவ வீரர் முகமது அப்பாஸ்

பின், அங்கிருந்து தன் சொந்த கிராமத்திற்கு உடலை எடுத்துச்செல்ல பலமணி நேரங்கள் அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருந்தார்.

ஆனால், அங்கு நிலவி வரும் கடும்பனி காரணமாக அவருக்கு உதவி கிடைக்கவில்லை.

பின், அப்பாஸும் அவருடைய இளம் சகோதரரும் தாயின் சடலத்தை சொந்த கிராமத்தை நோக்கி கால்நடையாக சுமந்து சென்றனர்.

ஷ்ரீநகரிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் அப்பாஸின் சொந்த கிராமம் அமைந்திருந்தது.

தாயின் சடலத்துடன் அப்பாஸ் சொந்த கிராமத்தை அடைவதற்கு பொதுமக்கள் பலரும் உதவி புரிந்தனர்.

ஜனவரி 31 ஆம் தேதி தாயின் சடலத்துடன் புறப்பட்ட அவர்கள் பிப்ரவரி 2 ஆம் தேதி தங்களுடைய சொந்த கிராமத்தை அடைந்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்