சென்னை கடற்கரையிலிருந்து இதுவரை 65 டன் எண்ணெய் படலம் அகற்றம்: மத்திய அரசு

சென்னையில் கடற்கரையிலிருந்து இதுவரை சுமார் 65 டன் எண்ணெய் படலத்தை அகற்றியுள்ளதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்தவாரம் சனிக்கிழமையன்று, எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதை அடுத்து, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள கடற்பரப்பில் எண்ணெ் படலம் பரவியது.

சனிக்கிழமையிலிருந்து தொடர்ந்து எண்ணெய் படலங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இச்சூழலில், எண்ணெய்க் கசிவுகளை அகற்றும் பணி நிலவரம் குறித்து மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இதுவரை சுமார் 65 டன்கள் எண்ணெய் படலங்களை அகற்றியுள்ளதாகவும், 90 சதவிகிதம் துப்புரவு பணிகள் முடிந்துவிட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும், இன்னும் ஓரிரு நாளில் இந்த எண்ணெய் படலம் அகற்றும் பணி முடிந்துவிடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த பணியில் அதிநவீன திரவம் உறிஞ்சும் இயந்திரங்களை கொண்டு சுமார் 54 டன்கள் அகற்றப்பட்டதாகவும், அதில் 70 சதம் தண்ணீர் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கப்பல்கள் மோதலால் சென்னை கடற்பரப்பில் பரவிய எண்ணெய் படலங்களை அகற்றும் பணி தீவிரம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
எண்ணெய் கறையால் மாசடைந்த கடற்கரை (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
எண்ணூர் எண்ணெய்க் கசிவு அகற்றும் பணிகள் (கணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்