தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன் : முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

தமிழக முதல்வர் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்து ஆளுநர் வித்யாசாகர் ராவுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

' முதல்வராக நான் பொறுப்பேற்க வேண்டுமென வற்புறுத்தியவர் ஓ. பி.எஸ்.தான்'- சசிகலா

படத்தின் காப்புரிமை THE INDIA TODAY GROUP
Image caption முதல்வர் பதவியிலிருந்து ஓ. பி.எஸ். ராஜினாமா

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அனுப்பப்பட்டுள்ள அந்த ராஜினாமா கடிதத்தில், தான் தனிப்பட்ட காரணங்களுக்காகவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சராக ஒப்புக்கொண்டது ஏன்? - சசிகலா விளக்கம்

மேலும் தனது தலைமையிலான அமைச்சரவையை கலைக்கவும் கோரியுள்ள ஓ.பன்னீர்செல்வம், தனது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் அதில் அவர் கோரியுள்ளார்.

முதல்வர் பன்னீர்செல்வத்தின் இந்தக் கடிதம், முன்னதாக இன்று மதியம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடந்த அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், கட்சிப் பொதுசெயலர், சசிகலாவை சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்து எடுக்கப்பட்ட முடிவை அடுத்து வருகிறது.

சசிகலா தேர்வு குறித்து இணையத்தில் பிரபலமாகும் மீம்களின் தொகுப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்