மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடே சிரிப்புதான்: ஓபிஎஸ்

தானும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரான மு.க. ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்ததாக அதிமுக பொது செயலாளர் வி.கே. சசிகலா தெரிவித்துள்ளது குறித்து பதிலளித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடே சிரிப்புதான் என்று கூறியுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் திடீர் தியானம்: சென்னையில் பரபரப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், அவர் கூறுகையில், இது இயல்பாக நடந்த ஓன்று சம்பவம் அது என்றும், மிருகங்களால் சிரிக்க முடியாது. மனிதர்களால் மட்டுமே சிரிக்க முடியும். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதிலும், சிரித்துக் கொள்வதிலும் எந்த தவறுமில்லை என்று கூறினார்.

முன்னதாக, கட்சித் தலைமைக்கு எதிராக பன்னீர் செல்வம் நடந்து கொள்வதன் பின்னணியில் திமுக இருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலர் சசிகலா குற்றம் சாட்டினார்.

பன்னீர் செல்வத்தின் பின்னணியில் திமுக: சசிகலா குற்றச்சாட்டு

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் : பி. ஹெச். பாண்டியன் குற்றச்சாட்டு

பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைக்குப் பின்னணியில் மத்திய அரசு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, திமுக உள்ளது என்று பதிலளித்தார் சசிகலா. சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்த நான்கு நாட்கள், முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

படத்தின் காப்புரிமை TV GRAB
Image caption தியானத்தில் பன்னீர் செல்வம்

முதல்வர் பதவியிலிருந்து விலக கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்தார்கள் என்று சசிகலா மீது குற்றம் சாட்டி ஓ. பன்னீர் செல்வம் குற்றம் சாட்டிய பிறகு, இன்று (புதன்கிழமை) அதிகாலை சுமார் 1.15 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா இக்கருத்தை தெரிவித்தார்.

பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு: சமூக ஊடகங்களில் தீயாக கருத்துகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்