மார்ச் 13 முதல் பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீங்கும் - ரிசர்வ் வங்கி

படத்தின் காப்புரிமை Bloomberg/Getty
Image caption செல்லாநோட்டு அறிவிப்பின் தாக்கம்

மார்ச் 13ம் தேதியிலிருந்து ஏடிஎம் இயந்திரங்களிலிருந்தும், வங்கிகளிலிருந்தும் பணம் எடுப்பதில் தற்போது இருக்கும் அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் விலக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நவம்பர் 8ம் தேதி, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று திடீரென அறிவித்ததை அடுத்து , வங்கிகள் தங்கள் கிளைகளில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகளை விதித்தன.

இதனால் நாடெங்கிலும் வங்கிகளில் பணப் பரிவர்த்தனைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

தற்போது வாடிக்கையாளர்கள் வாரத்திற்கு 24,000 ரூபாய் வரை எடுக்க முடியும்.

இந்த வரம்பு பிப்ரவரி 20ம்தேதியிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு, மார்ச் மத்தியிலிருந்து முழுமையாக அகற்றப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது..