ஆளுநர் நாளை சென்னை திரும்புகிறார்

தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ், வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image caption ஓ. பன்னீர் செல்வத்துடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் (கோப்புப்படம்)

ஆளுநர் மாளிகை அதிகாரி, பிபிசி தமிழுக்கு இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

அதிமுக பொதுச் செயலர் சசிகலாவை சட்டமன்றக் கட்சித் தலைவராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்த நிலையில், அவர் முதலமைச்சராகப் பதவியேற்பது தொடர்பான நடைமுறைகளை மேற்கொள்ள, ஆளுநர் எப்போது சென்னை திரும்புவார் என்று கடந்த 5-ம் தேதி முதல் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அங்கிருந்தாலும் என்னுடன் தொடர்பில் உள்ளனர்- ஓபிஎஸ்

ஆனால், ஆளுநர் வித்யாசாகர் ராவ், டெல்லிப் பயணத்தை முடித்துக் கொண்டு, மும்பை சென்றுவிட்டார். மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ள அவர், அங்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதனால், தமிழக அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், நாளை பிற்பகல் சென்னை திரும்ப உள்ளதாக மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகை அதிகாரி தெரிவித்தனர். சென்னை திரும்பிய பிறகு ஆளுநரின் நிகழ்ச்சிகள் என்ன என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசியல் நிலவரம்: கமல் ஹாசனின் ட்வீட்டுகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்