பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அவசர சட்டம் இயற்றப்பட்ட நிலையில் அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதியும், பாலமேட்டில் பிப்ரவரி 9 ஆம் தேதியும் மற்றும் அலங்காநல்லூரில் பிப்ரவரி 10 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று கிராம குழுவினாரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்து முடிந்தது.

அவனியாபுரத்தை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி ஆரவாரமாக தொடங்கியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்குமுன் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் மாடுப்பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகளும், 1607 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.

2 ஆண்டுகளுக்கு பிறகு, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்தியளவில் ட்விட்டர் வலைதளத்தில் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்