அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தொடங்கி கோலாகலம்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

சீறிப் பாய்ந்து வருகின்ற காளைகளை துரத்திப்பிடித்து இளைஞர்கள் அடக்கி வருவதால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா களைகட்டியுள்ளது.

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின

வாடிவாசலை தாண்டி வருகின்ற மாடு ஓட தொடங்கிய 15 மீட்டர் தொலைவுக்குள் அதனுடைய திமிலில் பிடித்து தொங்கி செல்லும் மாடுபிடி வீரர் அல்லது மாடு ஓடாமல் இருந்தால் திமிலில் மாடுபிடி வீரர் தொங்கிக் கொண்டிருக்க மாடு மூன்று முறை சுற்றிவிட்டால் அந்த மாடுபிடி வீரருக்கு பரிசு வழங்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு வன்முறை : விசாரணையை தொடங்கினார் நீதிபதி ராஜேஷ்வரன்

மாடுபிடி வீரர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் மாடு ஓடிவிட்டால், அந்த மாட்டின் உரிமையாளருக்கு அதற்கான பரிசு வழங்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த போட்டிக்கு பல அரசியல் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞர்களை பாராட்டியுள்ளார்.

அலங்காநல்லூர் , பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் தேதிகள் அறிவிப்பு

மேலும், இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், உள்பட பல அரசியல் பிரமுகர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் என பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தங்க காசுகள், பணம், சைக்கிள், செல்பேசி, நற்காலி என பல வகையான பரிசுகள் மாடுபிடி வீரர்களுக்கு அல்லது மாட்டின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், ஆயிரத்துக்கும் மேலான காளை மாடுகளும், ஏறக்குறைய 1500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை: ஓ. பன்னீர்செல்வம்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையாக நடைபெறுவதால், இதனை பார்க்க பல்லாயிரக்கணக்கானோர் அலங்காநல்லூரில் கூறியுள்ளனர்.

மோதியை விமர்சித்தவர்கள் தேச விரோதிகள்: நிர்மலா சீதாராமன்

அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் முன்னதாக நடைபெற்றுள்ள நிலையில் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேசவிரோத சக்திகள் ஊடுருவல்: முதல்வர் குற்றச்சாட்டு

காணொளி: ஜல்லிக்கட்டு - சென்னையில் பதற்றமும், சில வன்செயல்களும்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சென்னையில் பதற்றமும், சில வன்செயல்களும் (காணொளி)

மேலும் தகவல்களுக்கு:

ஜல்லிக்கட்டு போராட்டம் : தீக்கிரையாக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம் (புகைப்படத் தொகுப்பு)

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நடிகர் சிம்பு கோரிக்கை

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த போராட்டக்காரர்கள் எதிர்ப்பு

ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் முதல் அவசரச்சட்டம் வரை : பிபிசி தமிழின் சிறப்பு பக்கம்

ஜல்லிக்கட்டு: சென்னையின் சில பகுதிகளில் கலவரம்

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை போலிசார் விரட்டியடிக்க முயற்சி

ஜல்லிக்கட்டு எழுச்சிகள் காட்டுவது என்ன ?

ஜல்லிக்கட்டு தடை : சனிக்கிழமை ஸ்டாலின் உண்ணாவிரதம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்