ஓ.பி.எஸ் அணிக்கு இரண்டு எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர் ஒருவரும் ஆதரவு

தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அணிக்கு அதிமுகவைச் சேர்ந்த மேலும் இரண்டு எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர் ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

கிருஷ்ணகிரி எம்.பி. அசோக்குமார், நாமக்கல் சுந்தரம் ஆகிய இருவரும் இன்று காலை பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஏற்கெனவே, மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பன்னீர் செல்வம் அணியில் இருக்கிறார்.

அவருடன் சேர்த்து, மூன்று எம்.பி.க்கள் இதுவரை பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மக்களின் குரலுக்கு மதிப்பளிப்பேன் என்று ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்ற அவர் தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

விரைவில் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வோம்: மதுசூதனன்

எம்.எல்.ஏ.க்களிடம் வெள்ளைத்தாளில் கையொப்பம்: சண்முகநாதன் புகார்

விடுதியில் ஜாலியாகத்தான் இருக்கிறோம் : எம்.எல்.ஏ.க்கள் பேட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்