ஓரளவுக்குத்தான் பொறுமை காப்போம் - சசிகலா எச்சரிக்கை

தமிழகத்தில் தனது தலைமையிலான ஆட்சியை அமைக்க தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று நேரில் சந்திக்க அனுமதி கேட்டு அ.தி.மு.கவின் பொது செயலாளர் வி.கே.சசிகலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption ஓரளவுக்குத்தான் பொறுமை காப்போம் - சசிகலா எச்சரிக்கை

அ.தி.மு.க பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா நேற்று முன்தினம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் மனுவை சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில், இன்று அவர் ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்து அளித்த கடிதத்தை தாங்கள் ஏற்றுக்கொண்டு ஏழு நாட்கள் ஆகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்தில் கொண்டு, ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள தனது ஆதரவு ஏம்.எல்.ஏக்களுடன் இன்று ஆளுநரை நேரில் சந்திக்க அனுமதி கேட்டுள்ள அவர், அரசியலமைப்பின் இறையாண்மை, மாநிலத்தின் நலன் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை காப்பாற்ற ஆளுநர் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

பின்னர், போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.சசிகலா, ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும்வரை அ.தி.மு.கவை பிரித்து ஆள நினைப்பவர்கள் தோற்றுப்போவார்கள் என்றும், ஜனநாயகம் மீது நம்பிக்கை இருப்பதால் அமைதி காக்கிறோம் ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும் அதற்கு மேல் நாம் செய்ய வேண்டியதை செய்வோம் என்றும் கூறினார்.

ஓ.பி.எஸ் அணிக்கு இரண்டு எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர் ஒருவரும் ஆதரவு

சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

விரைவில் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வோம்: மதுசூதனன்

எம்.எல்.ஏ.க்களிடம் வெள்ளைத்தாளில் கையொப்பம்: சண்முகநாதன் புகார்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பன்னீர்செல்வம் ஒரு கோழை : சுப்பிரமணியன் சுவாமி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்