கைமாறியது அம்பாஸடர்; பர்ஷோவிடம் 12 மில்லியன் டாலருக்கு விற்பனை

இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் பிராண்ட்களில் ஒன்றை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் பிரெஞ்சு கார் உற்பத்தி நிறுவனமான பர்ஷோவிடம் சுமார் 12 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

அம்பாஸடர் காரானது இந்தியாவின் மிகவும் பெருமைமிகு வாகனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மேலும், அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் இதனை பெரிதும் விரும்பினார்கள்.

ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து அம்பாஸடர் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

பர்ஷோ நிறுவனம் மீண்டும் இந்த பிராண்டை புதுப்பிக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை.

பிரிட்டிஷ் மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டின் கணக்குப்படி, இந்தியாவில் சுமார் 30 ஆண்டுகளாக அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை அம்பாஸடர் பெற்றிருந்ததாக கூறுகிறது.

.

படத்தின் காப்புரிமை AFP

இந்தியாவில் கால் பதிக்க வேண்டும் என்று பர்ஷோ நிறுவனம் நீண்டகாலமாக காத்திருந்தது.

பின், 1990களின் நடுப்பகுதியில் இந்தியாவில் பொருளாதார கொள்கைகள் தளர்த்தப்பட்ட போது, நாட்டிற்குள் நுழைந்த வெளிநாட்டு கார் உற்பத்தியாளர்களில் பர்ஷோவும் ஒன்று.

இந்தியாவில் 1960களிலிருந்து 1980 நடுப்பகுதிவரை அம்பாஸடர் என்பது சமூக அந்தஸ்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது.

அப்போது சந்தையில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட ஒரே ஒரு சொகுசு காரும் இதுதான்.

பார்ப்பதற்கு கவர்ச்சியான தோற்றம் இல்லாவிட்டாலும், அதன் விசாலமான உட்பகுதி மற்றும் சத்தத்தை இடைநிறுத்தும் திறன் ஆகியவற்றால் பலமான கைதட்டல்களை பெற்றது.

இந்தியாவில் முதன்முதலில் அறிமுகமான டீசல் கார்களில் அம்பாஸடரும் ஒன்று.

மேலும், குளிர்விக்கும் வசதியும் அப்போது இது கொண்டிருந்தது.

ஆனால், அம்பாஸடர் கார்களின் வீழ்ச்சியானது ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது.

1980 களின் நடுப்பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையான நிலையில், 2013 - 2014 ஆண்டுகளில் வெறும் 2,000 கார்களே விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்