சென்னை சிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி

சென்னையில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படும் முயற்சியில் உயிரிழந்த ஹாசினி என்ற குழந்தையின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் மூன்று லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை STRINGER
Image caption கோப்புப்படம்

சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த ஹாசினி என்ற குழந்தையின் சடலம் அனகாபுத்தூர் அருகில் கடந்த எட்டாம் தேதியன்று கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையின் விசாரணையில், குழந்தையின் வீட்டில் அருகில் வசித்த இளைஞர் ஒருவரே, குழந்தையைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் முயற்சியில் கொலை செய்து, பிறகு எரித்தது தெரியவந்தது. அந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் பன்னீர்செல்வம், குழந்தையின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, அந்தக் குழந்தையின் குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்ற அறிவிப்பை இன்று வெளியிட்டார் பன்னீர்செல்வம்.

முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக ஓ. பன்னீர்செல்வம் இன்று பிற்பகல் ஒருமணியளவில் மாநில தலைமைச் செயலகத்திற்கு வந்தார்.

அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய அவர், தலைமைச் செயலக ஊழியர்கள் சிலரையும் சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்