தீர்ப்பு எப்படியிருக்க வாய்ப்பு? தாக்கங்கள் என்ன?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலர் சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று வெளியாகவுள்ள தீர்ப்பு எப்படியெல்லாம் இருக்க வாய்ப்பு உள்ளது, அதனால் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

உச்ச நீதி மன்றத்தில் பொதுவாக, தீர்ப்புகள் எழுதப்படும்போது, வழக்கமாக, ஒருமித்த கருத்து இருந்தால், ஒரு நீதிபதி தீர்ப்பு எழுதுவார், இன்னொரு நீதிபதி அதை ஏற்றுக் கொள்வார்.

ஆனால், வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளிடையே, கருத்து வேற்றுமை இருந்தால், தனித்தனித் தீர்ப்புகள் எழுதப்படும்.

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இந்த இரண்டில் எதுவும் நடக்கலாம்.

இரண்டு நீதிபதிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிப்பது என்று ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்து, தண்டனைக் காலம் எவ்வளவு என்பதில் முரண்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

அதிமுக பிளவு - 1988 திரும்புகிறதா ?

அல்லது, அனைத்து அம்சங்களிலும் இருவரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்து, ஒரு நீதிபதி மட்டும் கூடுதலாக ஒரு காரணத்தைச் சொல்லலாம்.

சசிகலாவுக்கு சிக்கல் வருமா?

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால் சசிகலா முதலமைச்சராகப் பதவியேற்கத் தடையில்லை. அவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பதைத் தவிர ஆளுநருக்கு மாற்று வழியில்லை.

ஆனால், தண்டனை அளிக்கும் வகையில் தீர்ப்பு இருந்தால், சசிகலா முதலமைச்சராகப் பதவியேற்க முடியாது. சிறைத் தண்டனை காலத்துடன், மேலும் 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.

மாறாக, இரு நீதிபதிகளும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி, இருவராலும் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டு, என்ன தண்டனை என்பதில் மட்டும் முரண்பட்டால் சசிகலா முதல்வராக முடியாது. ஏனென்றால், குற்றவாளி என்ற முடிவு அவரை தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்யும். ஆனால், உடனடியாக சிறைக்குச் செல்ல மாட்டார். ஏனென்றால், தண்டனையை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முடிவு செய்ய வேண்டும்.

ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்