'500 கிலோ' பெண்மணி சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளார்

உலகிலேயே மிகவும் எடை கூடியவர் என்று கூறப்படும் பெண் ஒருவருக்கான சிகிச்சையை இந்தியாவிலுள்ள மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Image courtesy : DR MUFFAZAL LAKDAWALA
Image caption சிகிச்சைகாக இந்தியா வந்துள்ள எமான் அஹ்மத் அப்த் எல் அட்டி

எகிப்தியரன எமான் அஹ்மத் அப்த் எல் அட்டியின் எடை சுமார் ஐநூறு கிலோ. அவரது உயிரைக் காக்கும் நோக்கிலேயே இப்போது சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

சிறுவயதில் ஏற்பட்ட மருத்துவப் பிரச்சினை காரணமாக அவர் முடங்கிப் போய் கடந்த இருபது வருடங்களாக வீட்டைவிட்டு வெளியே செல்லாமலேயே இருந்தார்.

இந்நிலையில் சிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை அவர் இந்தியா வந்துள்ளார்.

அவரது எடையைக் குறைக்க முன்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை.

இதையடுத்து அவரது குடும்பத்தினர், உடல் பருமனைக் குறைப்பதில் சிறப்புத் தேர்ச்சியுடைய இந்திய மருத்து வல்லுநர்களில் ஒருவரைத் தொடர்பு கொண்டனர்.

தற்போது அவருக்கு திரவு உணவு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டுள்ள சூழலில், அதற்கு அவரைத் தயார்படுத்தும் நோக்கிலேயே திரவு உணவு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்