கருணாநிதியின் இல்லத்தில் மர்ம மனிதர் பிடிபட்டார்

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் சிஐடி காலனி இல்லத்தில் புகுந்து அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட மர்ம நபர் காவல்துறையிடம் பிடிபட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று காலையில் சிஐடி காலனி இல்லத்திற்குள் புகுந்த அந்த மர்ம நபர் பிற்பகலுக்கு பின் வீட்டின் ஒரு அறையில் ஒளிந்திருந்ததாகவும் அந்த அறைக்குள் பிற்பகலுக்கு மேல், வேறு ஒரு பெண்மணியுடன் ராஜாத்தி அம்மாள் வந்தபோது கையில் இருந்த பொம்மைத் துப்பாக்கியால் பணத்தை எடுத்துவரச் சொல்லி மிரட்டிதாகவும் கூறப்பட்டுள்ளது.

பணத்தை எடுத்துவருவதாகச் சொல்லி கீழே வந்த ராஜாத்தியம்மாள் வீட்டின் வெளியில் இருந்த காவல்துறையினரை அழைத்ததையடுத்து அவர்கள் அந்த நபரைப் பிடித்தனர்.

ராஜேந்திர பிரசாத் என்ற அந்த நபர், வீட்டில் காவல் இல்லாத பகுதியில் சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்றிருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.

தற்போது சிஐடி காலனி வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்