சசிகலாவுக்கு தண்டனை - அரசியல் தலைவர்கள் கருத்து

சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அதிமுகவின் பொது செயலாளர் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்: சொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலை நாட்டப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் நிலையான ஆட்சியை உருவாக்க மாண்புமிகு தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்ப்பு வந்துவிட்டது; நிலையான ஆட்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை

விடுதலை கட்சி தொல் திருமாவளவன்:

காலம் கடந்த தீர்ப்பு. ஜெயலலிதா காலமானதால் அவர் தண்டனையில் இருந்து தப்புகிறார். அவரும் குற்றவாளிதான் என்று தீர்ப்பு சொல்கிறது. ஆளுங்கட்சி தொண்டர்கள் அம்மா ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்கிறார்கள். உண்மையில், இந்த ஆட்சி தொடர வேண்டுமா என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும். இந்த ஆட்சி தொடர்வது நியாயம் அல்ல. புதிய தேர்தல் அறிவிக்கப்படவேண்டும்.

பாஜக தலைவர் சுப்ரமணிய சாமி, ட்விட்டர் மூலம் வெளியிட்ட கருத்தில், 20 ஆண்டுளுக்குப் பின்னர் இந்த வழக்கில் தனக்கு வெற்றி கிடைத்துள்ளதாகக் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Thirumalai Manivannan
படத்தின் காப்புரிமை TWITTER

நடிகர் கமலஹாசன்: பழைய பாட்டுத்தான் இருந்தாலும்... தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம். எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்' என்று ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்