தீர்ப்பு எதிரொலி: அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

அ.தி.மு.க-வின் சட்டமன்றக் குழு தலைவராக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சசிகலா அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை DIPR

கூவத்தூரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

அதிமுக பிளவு - 1988 திரும்புகிறதா ?

செய்தியர்களிடம் பேசிய அவர், ''ஆளுநருக்கு தொலைநகல் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளேன். அவர் அழைத்ததும் நான் சந்திக்கவுள்ளேன். இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக என்னை தேர்ந்தெடுத்துள்ளனர், '' என்றார்.

ஆனால் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா,இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை குறித்து எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.

சசிகலாவுக்கு தண்டனை - அரசியல் தலைவர்கள் கருத்து

இதற்கிடையில், முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ,நீக்கப்பட்டுள்ளார் என்றும் சசிகலா அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை

இவர் இரண்டு மாதங்களில் அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக தேர்தெடுக்கப்பட்ட, மூன்றாவது தலைவர் எடப்பாடி பழனிசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு:

சசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை

அமைதி காக்க பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சொத்துக்குவிப்பு வழக்கு சசிகலா குற்றவாளி--உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க :பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்