அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பன்னீர்செல்வம் வேண்டுகோள்

அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்புவிடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிமுக பிளவு - 1988 திரும்புகிறதா ?

சொத்துக்குவிப்பு வழக்கில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் வி.கே.சசிகலா உள்பட மூன்று பேரின் குற்றம் உறுதிசெய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த அழைப்பை விடுத்துள்ளார் பன்னீர் செல்வம்.

அமைதி காக்க பன்னீர்செல்வம் வேண்டுகோள்

மாண்புமிக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இப்போதைய ஒட்டுமொத்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அதிமுகவின் ஒற்றுமைக்கும், நல்லாட்சி தொடரவும், தமிழகத்திற்கு நன்மை அளிக்கும் வகையில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு பன்னீர்செல்வம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சகப்பான நிகழ்வுகளை மறந்துவிட்டு, அவரவரின் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படுவதில் தயக்கம் வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலாவுக்கு தண்டனை - அரசியல் தலைவர்கள் கருத்து

நாம் பிளவுபடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்போரின் நோக்கத்திற்கு இடமளிக்காமல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை ஒற்றுமையுடன் தொடர அனைவரையும் கேட்டுக்கொள்வதாக அவர் இந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

காணொளி: சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு: சசிகலா உள்பட மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சசிகலா

மேலும் தகவல்களுக்கு:

சொத்துக்குவிப்பு வழக்கு சசிகலா குற்றவாளி--உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை

அமைதி காக்க பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சொத்துக்குவிப்பு வழக்கு சசிகலா குற்றவாளி--உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்