எடப்பாடி பழனிச்சாமி யார்?

சொத்துக் குவிப்பு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் சசிகலா குற்றவாளி என்று கூறி நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், அதிமுக கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை DIPR

தற்போது அதிமுக அரசின் நெடுஞ்சாலை துறை அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் (63) அரசியல் பயணம்:

தீர்ப்பு எதிரொலி: அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை : ஆளுநர் அலுவலகம் தகவல்

அதிமுகவின் சார்பில் சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1989-1991, 1991-1996, 2011 -2016, மற்றும் 2016 முதல் தற்போது வரை பதவியில் உள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக 1998- 1999 வரை பதவி வகித்தார்.

அவர் ஒவ்வொரு முறையும் எடப்பாடி தொகுதியில்தான் போட்டியிட்டார்.

2011ல் பாமகவின் கார்த்தி மற்றும் 2016ம் ஆண்டு தேர்தலில் அண்ணாதுரையை தோற்கடித்தார்.

2016ல் முதலில் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தவர் பின்னர் நெடுஞ்சாலை துறைக்கு மாற்றப்பட்டார்.

தமிழக அரசின் தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேஷன் மற்றும் பால் வள துறையிலும் பணியாற்றியுள்ளார்.

அதிமுக கட்சியை பொறுத்த வரையில், தற்போது அதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் மற்றும் சேலம் மாவட்ட செயலாளராக உள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்