ஓ.பி.எஸ் உள்பட20 பேர் அ.தி.மு.கவிலிருந்து நீக்கம்; சசிகலா உத்தரவு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் 20 பேரை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ,அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆதரவாளர்களுடன் முதல்வர் பன்னீர்செல்வம்

இதுகுறித்து அ.தி.மு.கவின் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவருடைய ஆதரவாளர்களான செய்தித் தொடர்புக்குழு உறுப்பினர் சி.பொன்னையன், பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, கட்சியின் செய்தித் தொடர்புக் குழு உறுப்பினரும், கல்வித்துறை அமைச்சருமான க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் ப.மோகன், பி.எஸ்.மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர், க.தவசி, கே.ஏ.ஜெயபால், எஸ்.கே.செல்வம், கே.பி.ராஜேந்திர பிரசாத், கே.ஏ.கே.முகில், பரிதி இளம்வழுதி, இ.பொன்னுசாமி, வ.நீலகண்டன், கோ.ஐயப்பன், எம்.முத்துராமலிங்கம், எஸ். முத்துச்செல்வி ஆகியோர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீக்கப்பட்டவர்கள் கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டார்கள் என்றும், கட்சி கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடையை ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதவி இல்லாமலே சசிகலா செல்வாக்கு செலுத்த முடியும்: சுப்ரமணியன் சுவாமி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்