ஜெயலலிதா மரணம் குறித்து நீதித்துறை நடவடிக்கை - தீபா கோரிக்கை

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக இந்திய நீதித்துறை தன்னிச்சையாக நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காட்ட வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை @THANTHITV

சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வரவேற்றிருக்கிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்பட மூவருக்கும் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் உடனடியாக சரணடைய ஆணையிட்டுள்ளதை பற்றி கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கு சசிகலா குற்றவாளி--உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்திய நீதித்துறை சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது என்றும் தமிழகத்தை தன்னுடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எண்ணியிருந்த ஒரு குடும்பத்தின் எண்ணங்களை இந்த தீர்ப்பு தவிடு பொடியாக்கியுள்ளது என்றும் தீபா தெரிவித்திருக்கிறார்.

ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 1996 முதல் 2017 வரை

அதிமுக தொண்டர்கள் மறைந்த அம்மாவின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பவர்களாக விளங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிப்ரவரி 24 ஆம் நாள் ஜெயலலிதாவின் பிறந்த நாளின்போது, தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பதாக தீபா கூறியிருந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதிக்கு பிறகு, தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழந்து வருகின்றன.

மேலதிக தகவல்களுக்கு:

எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை : ஆளுநர் அலுவலகம் தகவல்

எடப்பாடி பழனிச்சாமி யார்?

சசிகலாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து வலம் வரும் மீம்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்