பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார் தீபா

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, முதல்வர் பன்னீர் செல்வம் அணியில் இணைந்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை ThanthiTV

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகாலவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டார் தீபா. வரும் 24-ம் தேதி, ஜெயலலிதா பிறந்த நாளன்று தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

இந் நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இரவு மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார்.

ஓ.பி.எஸ் உள்பட20 பேர் அ.தி.மு.கவிலிருந்து நீக்கம்; சசிகலா உத்தரவு

அப்போது அங்கு வந்த தீபாவும் அஞ்சலி செலுத்தினார்.

பதவி இல்லாமலே சசிகலா செல்வாக்கு செலுத்த முடியும்: சுப்ரமணியன் சுவாமி

பின்னர் பன்னீர் செல்வத்தை சந்தித்த அவர், இருவரும் இணைந்து இரு கரங்களாக செயல்படுவோம் என்றும், ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை இருவரும் தொடர்ந்து செய்வோம் என்றும் தெரிவித்தார்.

இன்று முதல் தனது அரசியல் பிரவேசம் துவங்குவதாகவும் தீபா தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்