என்னை சிறையில் அடைக்கலாம், என் மனதை சிறையில் அடைக்க முடியாது: சசிகலா

படத்தின் காப்புரிமை AIADMK

உச்சநீதிமன்றம் தனக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய பிறகு, முதல் முறையாகப் பேசிய சசிகலா, தனக்கு ஏற்பட்டிருப்பது தாற்காலிகப் பிரச்சனைதான் என்று தெரிவித்தார்.

கூவாத்தூரில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தங்கியிருக்கும் அவர், தீர்ப்புக் குறித்து கருத்துத் தெரிவித்தார்.

"என்னைத்தான் சிறையில் அடைக்க முடியும். என் மனதை யாரும் சிறையில் அடைக்க முடியாது. கட்சியின் மீதுள்ள பாசத்தையோ, அக்கறையையோ யாரும் சிறையில் அடைக்க முடியாது. நான் எந்த மாநிலத்தில் இருந்தாலும், என் மன ஓட்டம், கட்சியின் மீதே இருக்கும். கட்சிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்," என்றார் சசிகலா.

பதவி இல்லாமலே சசிகலா செல்வாக்கு செலுத்த முடியும்: சுப்ரமணியன் சுவாமி

படத்தின் காப்புரிமை AIADMK

"எனக்கு வந்துள்ளது தாற்காலிகப் பிரச்சனைத்தான். அதை நான் சமாளித்துக் கொள்வேன். நான் எங்கு இருந்தாலும் அதிமுக மீதான சிந்தனை எப்போதும் இருக்கும். அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது," என்றார்.

பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார் தீபா

அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுக என்ற ஒரு கட்சியே இருக்கக் கூடாது," என்று கோபமாகக் குறிப்பிட்ட சசிகலா, எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதால் கூடிய விரைவில் ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தீர்ப்பு எதிரொலி: அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

இதனிடையே, கூவத்தூரில் இருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு போயஸ்தோட்ட இல்லத்துக்கு வந்தடைந்தார் சசிகலா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க :பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்