டி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக நியமனம்

Image caption தமிழக ஆளுநரை சந்தித்தபோது வி.கே.சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன்

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவின் அக்காள் மகனும் அ.தி.மு.கவின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சசிகலாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து வலம் வரும் மீம்கள்

வி.கே. சசிகலா இன்று காலையில் முதலாவதாக வெளியிட்ட அறிவிப்பில், 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதாவால் கட்சியைவிட்டு நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரனும் அ.தி.மு.கவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் செயலாளராக இருந்த டாக்டர் எஸ். வெங்கடேஷும் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்புக் கோரியதோடு, தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டிக்கொண்டதால் அவர்கள், அ.தி.மு.கவில் சேர்த்துக்கொள்ளப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

காணொளி: சொத்துக்குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விபரங்கள் - வழக்கறிஞர் மணி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சொத்துக்குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விபரங்கள் - வழக்கறிஞர் மணி

சொத்துக்குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து சில துளிகள்

இதற்கு சிறிது நேரத்திலேயே சசிகலா வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், டி.டி.வி. தினகரன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் போது சென்னையில் என்ன நடந்தது? புகைப்படங்களில்

2011ல் சசிகலாவும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் தனக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதிய ஜெயலலிதா, அவர்கள் அனைவரையும் தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சசிகலா, எம். நடராஜன், டி.டி.வி. தினகரன், டாக்டர் எஸ். வெங்கடேஷ், மகாதேவன் உள்ளிட்டவர்களது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. பிறகு, சசிகலா மட்டும் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஜெயலலிதா இறக்கும்வரை மற்றவர்கள் யாரும் கட்சியில் சேர்க்கப்படவில்லை.

ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு மீண்டும் போயஸ் தோட்ட இல்லத்தில் தென்பட்ட தினகரன், சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுனரைச் சந்தித்தபோது அவருடன் சென்றார். இவர் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகனாவார்.

காணொளி: சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு: சசிகலா உள்பட மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் பொதுச் செயலாளர் சசிகலா சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், துணைப் பொதுச் செயலாளர் பதவி கட்சியின் அதிகாரமிக்க பதவியாக உருவெடுத்திருக்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இனிப்பு கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபடும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்