சரணடையச் செல்லுமுன் எம்.ஜி.ஆர் இல்லத்திலும் சசிகலா அஞ்சலி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா நடராஜன், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையச் செல்லுமுன், அதிமுகவின் நிறுவனத்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரனின் இல்லத்துக்கு சென்று சசிகலா அஞ்சலி செலுத்தினார்.

Image caption ராமாவரம் தோட்டத்திலும் அஞ்சலி

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் சரணடைய மேலும் கால அவகாசம் கேட்டு அவர் சமர்ப்பித்த மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து பெங்களூருக்கு புறப்பட்ட சசிகலா, முன்னதாக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதா சமாதியில் மும்முறை தனது கையால் அறைந்து ஏதோ சபதமும் எடுத்துக்கொண்டார் சசிகலா.

சொத்துக்குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து சில துளிகள்

சரணடையச் செல்லுமுன் சமாதியில் சபதம் செய்த சசிகலா

சசிகலா சரணடைய அவகாசம் தர உச்சநீதிமன்றம் மறுப்பு

டி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக நியமனம்

இதன் பின்னர் பெங்களூரு புறப்படும் வழியில் அவர் சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் இல்லத்தில் அவரது படத்தின் முன் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ராமாவரம் இல்லத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்கும் மரியாதை செலுத்தியபின் காரில் ஏறிச் சென்றார்.

அங்கு சசிகலா வருவதை அறிந்ததும் சிறிய அளவில் தொண்டர்களும் குவிந்தனர். போலிசாரும் விரைந்தனர்.