சரணடையச் செல்லுமுன் ஜெயலலிதா சமாதியில் சபதம் செய்த சசிகலா

Image caption அஞ்சலியும் சபதமும் - மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் சசிகலா

சரணடைய கால அவகாசம் கேட்டு சசிகலா நடராஜன் சமர்ப்பித்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய, சசிகலா இன்று காலை புறப்பட்டார்.

முன்னதாக பெங்களூரு புறப்படுமுன், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அங்கு அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

சசிகலாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து வலம் வரும் மீம்கள்

ஜெயலலிதா நினைவகத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய சசிகலா , மலர்தூவிய பின், ஏதோ முணுமுணுத்து, மூன்று முறை ஜெயலலிதாவின் சமாதியில் அறைந்து ஏதோ சபதம் செய்ததை தொலைக்காட்சி நேரலைக் காட்சிகள் காண்பித்தன.

Image caption சசிகலா சபதம்

மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட நிலையில் காணப்பட்டார் சசிகலா.

அப்போது அங்கு சிறிய அளவில் கூடியிருந்த அ இஅதிமுக தொண்டர்கள் கூட்டத்தினர் சசிகலாவை ஆதரித்து முழக்கமிட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து சில துளிகள்

அதிமுக பிளவு - 1988 திரும்புகிறதா ?

சசிகலா சரணடைய அவகாசம் தர உச்சநீதிமன்றம் மறுப்பு

டி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக நியமனம்

அவர் என்ன சபதம் ஏற்றார் என்று தெரியவில்லை.

இதற்குப் பிறகு சாலை வழியாக பெங்களூருக்கு புறப்பட்டார் சசிகலா. இதற்காக ஓசூர் வரை சாலைகளில் காவல்துறை பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

காணொளி: சொத்துக்குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விபரங்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சொத்துக்குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விபரங்கள் - வழக்கறிஞர் மணி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்