சசிகலா ஆடைகளைக் கொண்டுவந்த வாகனம் மீது தாக்குதல்; சிறை வளாகம் முன்பு போலீஸ் தடியடி

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வந்த அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்காக, அவரது ஆடைகளைக் கொண்டு வந்த வாகனத்தின் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனால் கடும் மோதல் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினார்கள்.

சென்னையிலிருந்து காலையில் புறப்பட்ட சசிகலா, மாலை 5.15 மணிக்கு நீதிமன்ற வளாகத்துக்கு வந்தடைந்தார். அவரது

அதன்பிறகு, அவருடன் வந்தவர்களின் கார்களும் வந்தன.

என் மனதை யாரும் சிறையில் அடைக்க முடியாது: சசிகலா

அந்த வாகனத் தொடரணியில், சசிகலாவின் ஆடைகளை ஏற்றி வந்த வாகனமும் இருந்தது. அப்போது, சிறை வளாகத்தின் முன்பு காத்திருந்த ஒரு கும்பல், அந்த வாகனங்கள் மீது ஆத்திரத்துடன் தாக்குதல் நடத்தியது. கார் கண்ணாடிகளை தடியால் உடைத்து நொறுக்கினார்கள். ஏழு வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

நிலைமை எல்லை மீறீச் சென்றதை அடுத்து, போலீசார் வன்முறையாளர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதில், தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் காயமடைந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க :பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்